'சக்சஸ் மந்த்ரா' நாளை நடக்குது - 11,12th மாணவருக்கு வரப்பிரசாதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 16, 2019

'சக்சஸ் மந்த்ரா' நாளை நடக்குது - 11,12th மாணவருக்கு வரப்பிரசாதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ்1, பிளஸ்2 மாணவருக்கு புதிய பாடத்திட்டத்தை எதிர்கொள்ளும் வெற்றி ரகசியத்தை சொல்லித்தரும், 'தினமலர்' நாளிதழின், 'சக்சஸ் மந்த்ரா' வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நாளை நடக்கிறது. மாணவர்கள் நலன் கருதி, 'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்' போன்ற கல்வி நிகழ்ச்சிகளை 'தினமலர்' நாளிதழ், நடத்தி வருகிறது.தற்போது, வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு புதிய பாடத்திட்டதை எளிதாக எதிர்கொள்வது எப்படி, என்பதை விரிவாக எடுத்துச் சொல்ல, 'சக்சஸ் மந்த்ரா' - ஜெயித்துக்காட்டுவோம் 2.0' எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவனத்துடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட தயாரிப்பு குழு வல்லுநர்கள், அனுபவம் வாய்ந்த கல்வி விரிவுரையாளர்களை கொண்டு, புதிய பாடப்புத்தகத்தை எப்படி அணுகலாம், 'க்யூ.ஆர்' கோடு முக்கியத்துவம், பயன்படுத்தும் வழிமுறைகள், பொதுத்தேர்வு நடக்கும் விதம் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது, மனப்பாடம் செய்யாமலே புரிந்து கொள்வது, சுவாரசியத்துடன் பாடங்களை படிப்பது எப்படி, தேர்வுக்கு முன் உடல் மற்றும் மனதை எப்படி தயார்படுத்தலாம், கற்றதை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்துவது போன்ற அனைத்து, 'சக்சஸ் மந்த்ரா'க்களையும், மாணவர்கள் தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பு. அனுமதி இலவசம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து பயன்பெறலாம். காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்கும் அனைத்து மாணவருக்கும், முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். சாதனை படைக்க நினைக்கும் மாணவருக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதம்!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews