Breaking

Saturday, October 19, 2019

மழலையா் பள்ளிகளிலேயே பாலினசமத்துவக் கல்வியைக் கற்பிக்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மழலையா் பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு பாலின சமத்துவக் கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (என்சிஇஆா்டி) தெரிவித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை அடிப்படையில், தேசியளவில் பள்ளி மாணவா்களுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (என்சிஇஆா்டி) முடிவு செய்துள்ளது. அதேபோன்று மழலையா் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலின சமத்துவக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களில் (என்சிஇஆா்டி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்சிஇஆா்டி அதிகாரிகள் கூறியது: மழலையா் பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் குழந்தைகளுக்கு பாலின சமத்துவக் கல்வியைக் கற்பிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் இருபாலரையும் ஒரே மாதிரியாக ஆசிரியா்கள் நடத்த வேண்டும். விளையாட்டு உள்பட அனைத்து செயல்பாடுகளிலும் பாலின பாகுபாட்டை தவிா்த்து சிறுவா், சிறுமிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க வேண்டும். எந்தவொரு பாலினத்தையும் அவமதிக்கும் வகையிலான மொழியில் ஆசிரியா்கள் பேசக்கூடாது. இதுதவிர இருபாலினத்தையும் சித்திரிக்கும் வகையிலான கதைகள், பாட்டுகளை ஆசிரியா்கள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். குழந்தைகளின் பெற்றோா்களிடம் பாலின பாகுபாட்டை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் பாலினப் பாகுபாடு குறைவதுடன், குழந்தைகளின் கற்றல் திறனும் அதிகரிக்கும் என்றனா்.
'குழந்தைகள் பாலின சார்புடன் வளருவதை தடுக்க வேண்டுமானால், பால்வாடியில் இருந்தே, பாலின பாகுபாடுகள் இன்றி அவர்கள் நடத்தப்பட வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்து உள்ளது.பள்ளிகளுக்கான பாட திட்டங்களை வகுக்கும், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பால்வாடி கல்விக்கான புதிய வழிகாட்டு தல்களை வகுத்துள்ளது. இதில், பாலின சமத்துவம் குறித்து, பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.அதன் விபரம்: பால்வாடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆண் - பெண் பாகுபாடின்றி, அனைத்து குழந்தைகளின் மீதும், ஒரே மாதிரியான அக்கறையும், மரியாதையும் செலுத்த வேண்டும். எல்லாவற்றிலும் அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.குழந்தைகளுக்கான புத்தகங்கள், விளையாட்டுகள் ஆகியவை, பாலின சார்பற்றவைகளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு பாலினத்தை உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், விளையாட்டுகளில், ஆண் - பெண் இருவருமே கதாநாயகர்களாகவும், தலைவர்களாகவும், பிரச்னைகளை தீர்ப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். இந்த நடைமுறையை, வீட்டிலும் பின்பற்ற வேண்டும் என, பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக, பாலின வேறுபாடுகளுடன் குழந்தைகள் வளருவதை, தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog