எல்.ஐ.சி அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.,யில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு மே 20 முதல் தொடங்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், எல்.ஐ.சி.யில் அப்ரண்டிஸ் பணிக்கான மெயின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதனை, எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். நேரடியாக தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.
https://www.licindia.in/Bottom-Links/Main-Result-of-Recruitment-of-ADO
அமைப்பு: மத்திய அரசு
பதவி: Apprentice Development Officer (ADO)
காலியிடங்கள்: 8,581
தென்மண்டல காலியிடங்கள்: 1,257
சம்பளம்: 34,503 ரூபாய்
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
பணி அனுபவம்: அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்/எஸ்டி பிரிவினருக்கு: 50 ரூபாய்
இதர பிரிவினருக்கு: 600 ரூபாய்
வயது: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எல்ஐசி.,யின் அதிகார்ப்பூர்வ அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:
http://www.licindia.in/Bottom-Links/careers
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.