👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

'கேங்மேன்' பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய, கோவையில், மாதிரி உடல் தகுதி தேர்வு மையத்தை அமைத்துள்ள மின் வாரியம், இது தொடர்பாக, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ளது.
தமிழக மின் வாரியம், கேபிள் பதிப்பு, மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள, கேங்மேன் என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, இந்த ஆண்டு மார்ச்சில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வுக்கு, ஐந்தாம் வகுப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப் பட்டாலும், முதுகலை மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பதாரர்களை, மாவட்ட வாரியாக பிரித்து, இம்மாத இறுதியில், உடல் தகுதி தேர்வும், தொடர்ந்து, எழுத்து தேர்வும் நடத்தி, ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக, தற்போது, கோவை மண்டல தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில், கம்பத்தில் ஏறுவது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, மாதிரி உடல் தகுதி தேர்வு மையத்தை, வாரியம் அமைத்துள்ளது.முறைகேட்டை தடுக்க, உடல் தகுதி தேர்வு, வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை, அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களையும், கோவைக்கு அழைத்து, உடல் தகுதி தேர்வு நடத்துவது தொடர்பாக, வாரியம் பயிற்சி அளிக்க உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.