👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது என்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வரப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசும் கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'10 வயது குழந்தைக்கு என்ன தெரியும்?' - குழந்தைகளுக்கு கல்வி மீது வெறுப்பைத் தூண்டுகிறதா பொதுத் தேர்வுகள்?
இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது; 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.