"அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா"
பொருள்:
அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.