Search This Blog
Sunday, October 20, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போலீஸ், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இலவசமாக பயிற்சி வழங்கி அசத்தி வருகிறார். ஏராளமான இளைஞர்கள், இவரது பயிற்சியின் மூலம் பலன்பெற்று, அரசு பணியில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் வசிப்பவர் நெல்சன் மனாசியா (67). பிஏ பொருளாதாரம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலங்களிலே தடகள போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றவர். 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் 55.5 நொடிகளிலும், 1,500 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 4.12 நிமிடங்களிலும் வந்து அசத்தினார். கேரளாவில் நடந்த அகில இந்திய தடகள போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று 4x400 தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் இவரது சாதனைப்பயணம் தொடர்ந்தது. இதையடுத்து இவருக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில், 1978ல் ரயில் பெட்டி தொழிற்சாலையில் கிளார்க் பணி கிடைத்தது. பணியில் இருந்தபடியே பங்கேற்ற தொடர் ஓட்டப்போட்டியில் தொடர்ந்து சாதனை படைத்தார். இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இவரது சாதனைகளை பாராட்டி 18 வருட சிறப்பு ஊதியத்தை வழங்கி கவுரவித்தது. இதையடுத்து ஆண்டுக்கு ஒரு மாதம் என்ற அடிப்படையில், ரயில்வே ரெஜிமென்ட் மூலம் துணை ராணுவப்படையில் பணியாற்றினார். அங்கு 1993 முதல் 1996 வரை பணியாற்றி துணை ராணுவ வீரர்களுக்கு உடற்பயிற்சி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினார். ஒரே நேரத்தில் 2 அரசு பதவிகளில் பணியாற்றிய பெருமை உடையவர். 2013ல் ஓய்வு பெற்ற இவர், ஓய்ந்திருக்க விருப்பமின்றி, தனக்கு தெரிந்த பயிற்சி முறைகளை இளைஞர்களுக்கு கற்றுத்தர விரும்பினார்.
தினமும் அதிகாலை 6 மணிக்கு இவரது ஓட்டப்பயிற்சி, இவர் படித்த பள்ளியான சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் துவங்குகிறது. பின்னர் போலீஸ், ராணுவத்தில் சேர விரும்பும், விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தடகளம், உடற்பயிற்சி அளித்து வருகிறார். 1,600 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார். காலை 6-8 மணி, மாலை 5-8 மணியளவில் இடைவிடாமல் பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற இளைஞர்களில் கடந்த 2013ல் 20 பேர், 2014ல் 25 பேர், 2019ல் 50 பேர் ராணுவம், போலீஸ் பணியில் சேர்ந்துள்ளனர்.
‘மழையில் ஓடினார்...வாழ்க்கையை மாற்றினார்’
இங்கு பயிற்சி பெறும் நந்தினி கூறுகையில், ‘‘நான் எம்எஸ்சி ஐ.டி படித்துள்ளேன். எனக்கு போலீஸ் துறையில் சேரவேண்டும் என்ற ஆசை இருந்தது. எங்கு பயிற்சி மேற்கொள்வது என்ற குழப்பம் இருந்தது. அப்போதுதான் சாரை சந்தித்து, என் போலீஸ் ஆசையை கூறினேன். எனக்கு மட்டுமின்றி பலருக்கும் இலவசமாக பயிற்சி மற்றும் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறார்’’ என்றார்.மோகன்ராஜ் கூறுகையில், ‘‘நான் எம்டெக் படித்துள்ளேன். எஸ்ஐ ஆக விரும்பிய எனக்கு, தடகள போட்டிகளில் சார் தீவிர பயிற்சி அளித்தார். விளையாட்டில் தேர்வு பெற்றால் போலீஸ் துறையில் எளிதாக செல்லலாம் என்று அறிவுறுத்தினார். தற்போது தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார்.முகேஷ் கூறுகையில், ‘‘எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை இருந்தது. சாரிடம்பயிற்சி எடுத்தேன் கடந்த ஆண்டு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போதே ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்தது. அதில் பங்கேற்றேன். கிடைக்குமோ... கிடைக்காதோ என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் சார்தான், ‘100 சதவீதம் நீ ராணுவத்தில் சேர்ந்து விடுவாய்’ என உறுதியாக கூறினார். அவரது உறுதி வீண் போகவில்லை. நான் தற்போது ராணுவத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். சாரை என்றும் மறக்கவே மாட்டேன்’’ என்றார்.
பாண்டி கூறுகையில், ‘‘பிளஸ் 2 முடித்து விட்டு சும்மா சுற்றித்திரிந்தேன். ஒரு நாள் மழையில் நெல்சன் ஓடிக் கொண்டிருந்தார். அவரிடம், ‘வயதான காலத்தில் எதற்கு ஓடுகிறீர்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘இந்த ஓட்டம் தான் எனது வாழ்க்கையை உயர்த்தியது. அதனால்தான் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். உடனே, ‘நானும் பயிற்சி எடுக்க விரும்புகிறேன்’ என்றேன். அவர் தந்த தீவிர பயிற்சியில், தற்போது நான் தூத்துக்குடி ஏஆர் போலீசில் பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்ற பலரை சார் உருவாக்கியிருக்கிறார்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
போலீஸ், மிலிட்டரி வேலைக்கு இலவச பயிற்சி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.