RTE - தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2019

Comments:0

RTE - தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 - 2019ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவிகித இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்வி கட்டணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இணைந்து செலுத்தப்படும். இந்நிலையில் கடந்த 2018 - 2019ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 64 ஆயிரத்து 385 பேருக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. அதில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக்கட்டண பாக்கி தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 2013 முதல் 2018 வரை இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்ற 4 லட்சத்து 83 ஆயிரத்து 902 பேருக்கு தமிழக அரசு சார்பில் இதுவரை 644 கோடி ரூபாய் கல்வி கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங் களில் ஏழை குழந்தைகள் ஆண்டு தோறும் இலவசமாக சேர்க்கப்படுவர். இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. இவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்திவிடும். அதன்படி 2018-19-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 64,385 பேர் சேர்ந்தனர். அந்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 2018-19-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள எல்கேஜி, யுகேஜி, 1-ம் வகுப்பு குழந்தை களுக்கு தலா ரூ.11,947 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாம் வகுப்புக்கு ரூ.11,895, மூன்றாம் வகுப்புக்கு ரூ.12,039, நான்காம் வகுப்புக்கு ரூ.12,033, ஐந்தாம் வகுப்புக்கு ரூ.12,665, ஆறாம் வகுப்புக்கு ரூ.16,038, ஏழாம் வகுப்புக்கு ரூ.15,915 மற்றும் எட்டாம் வகுப்புக்கு ரூ.15,936 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரை வில் கல்விக்கட்டண பாக்கித் தொகை வழங்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே 2013-18-ம் கல்வி யாண்டுகளில் தனியார் பள்ளி களில் சேர்ந்த 4.83 லட்ச குழந் தைகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.644 கோடி, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews