Search This Blog
Saturday, October 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் ராம.வெண்ணிலா (43). தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
இவர் மாணவர்கள் அறிவியல் உண்மைகளை தெரிந்துகொள்ளவும், அறிவியல் பாடத்தை விரும்பிப் படிக்கும் வகையிலும் பள்ளிகள்தோறும் சென்று பாடல்கள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளம் கிராமத்தில் தொடக்கக் கல்வி படித்துவிட்டு, காரியாபட்டியில் பிளஸ் 2 வரை படித்தேன். படிக்கும்போதே கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கும் எழுத்தறிவு ஏற்படுத்தும் வகையில் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து கிராம மக்களுக்கு பயிற்சி அளித்தேன்.
அப்போதுகிடைத்த அனுபவ அடிப்படையில், தமிழ்நாடு அறிவியல்இயக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அறிவியல் உண்மைகளை தெரிவிக்கவும், எளிதாக அறிவியல்பாடங்களை புரிந்துகொள்ளும் வகையில் பாடல்கள் மூலம்விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
அறிவியல் கண்டுபிடிப்புகள்அறிவியல் இயக்கத்தில் சுமார்300-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அதனை பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று பாடல்கள் பாடி வருகிறேன்.
இப்பாடல்கள் மூலம் அறிவியல் உண்மைகள், மாணவர்களின் உடல்நலம், ஆரோக்கியத்துக்கான வழிமுறைகள், பெண்கள்கல்வி, இருபாலர் விழிப்புணர்வு,பொது மருத்துவம், இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் அறிவியல் கண்டு பிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் பாடிவிளக்கி வருகிறேன் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளி மாணவர்களுக்கு பாடல்கள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.