Search This Blog
Saturday, October 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லோக் பவனில் நேற்று மாலை முக்யமந்திரி கன்யா சுமங்களா யோஜனா திட்ட அறிமுக விழா நடைபெற்றது. அதிக் கலந்துகொண்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ''3 வயதான அனைத்துக் குழந்தைகளும் மழலையர் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவர். இதற்காக அனைத்து அங்கன்வாடி மையங்களும் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்.
இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். 5 வயதான குழந்தைகள் அனைவரும் தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
'பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம்; பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி, பெண் குழந்தைகளின் மேம்பாட்டை ஊக்கப்படுத்தினார். உத்தரப் பிரதேச அரசின் முக்யமந்திரி கன்யா சுமங்களா யோஜனா திட்டம், பிரதமரின் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதாக அமையும்.
பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து படித்து முடிக்கும்வரை அரசு உதவிகளைச் செய்யும். பிறக்கும்போது, ரூ.2,000. ஒரு வருடத் தடுப்பூசி போட்ட பிறகு, ரூ.1000, ஒன்றாம் வகுப்பு சேர்க்கப்பட்ட பிறகு ரூ.2,000 தொகையை அரசு வழங்கும்.
அதேபோல 6-ம் வகுப்பு சேர்த்தபிறகு ரூ.2,000, 9-ம் வகுப்பில் ரூ.3,000 மற்றும் டிகிரி அல்லது டிப்ளமோ சேர்ந்தபிறகு 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தை பிறந்தால், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் அனைத்துக் குடும்பங்களும் இந்த நிதியுதவியைப் பெறலாம்'' என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்: யோகி ஆதித்யநாத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.