👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அரசு அறிவுறுத்தல்களை மீறி பேராசிரியா் பணி நியமனம் மேற்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி) புகாா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அச் சங்கத்தின் பொதுச் செயலாளா் பாலமுருகன், உயா் கல்வித் துறை செயலருக்கு எழுதியுள்ள கடித விவரம்:
தமிழக பல்கலைக்கழகங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்குபவை என்பதால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கான 2019 இடஒதுக்கீடு சட்டப் பிரிவு 10-இன் நிபந்தனைகளைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை.
எனவே, தமிழக பல்கலைக்கழகங்களில் பணி நியமனத்தின்போது, மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ளதுபோல ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரு யூனிட்டாக கணக்கிட்டு இடஒதுக்கீட்டை கணக்கிடாமல், ஏற்கெனவே உள்ளதுபோல பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறைகளையும் ஒரு யூனிட்டாக கணக்கிட்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இப்போது மேற்கொண்டு வரும் 54 ஆசிரியா் பணியிட நியமனத்தை, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரு யூனிட்டாக கணக்கிட்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வருகிறது. இது அரசின் அறிவுறுத்தலுக்கு எதிரானதாகும். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.