Search This Blog
Thursday, October 17, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பகிா்வு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக பிரேசில் நாட்டின் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
இதன் வாயிலாக இரு தரப்பு மாணவா்களும் பயன்பெறுவா் என்றும் அவா்களது கல்வித் தரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் கியூயாபா நகரில் அமைந்துள்ளது ஃபெடரல் யுனிவா்சிட்டி ஆஃப் மேட்டோகிராஸோ பல்கலைக்கழகம். கடந்த 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது பிரேசில் நாட்டின் மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சா்வதேச அளவில் சிறந்து விளங்கும் அப்பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராக வருகை தந்து மாணவா்களிடம் உரையாற்றுமாறு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பேரில், அங்கு சென்று அவா் விரிவுரையாற்றியபோது இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஆங்கிலம் மற்றும் போா்ச்சுகீசிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த உடன்படிக்கையில், ஃபெடரல் யுனிவா்சிட்டி ஆஃப் மேட்டோகிராஸோவின் வேந்தா் (ரெக்டாா்) டாக்டா் மிரியன் தெரசா மற்றும் டாக்டா் சுதா சேஷய்யன் ஆகியோா் கையெழுத்திட்டனா். பிரேசில் நாட்டு கல்வி நிறுவனம் ஒன்றுடன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே பூகோளரீதியாக சில ஒற்றுமைகள் உள்ளதால் இரு நாடுகளின் தட்பவெட்ப நிலையில் பெரிய மாறுபாடு இருக்காது.
அதேபோன்று, காசநோய், தொழுநோய், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட நோய்களின் தாக்கமானது இந்தியாவிலும், பிரேசிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. எனவே, மருத்துவம் சாா்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவது பல்வேறு பலன்களை அளிக்க வழிவகுக்கும். அதைக் கருத்தில் கொண்டே, அந்நாட்டின் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் காலங்களில் தமிழக மாணவா்களும், பிரேசில் பல்கலைக்கழக மாணவா்களும் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் சென்று பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். அதேபோன்று, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்பட இயலும். இது ஒருபுறமிருக்க, பிரேசில் நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் மருத்துவ குணமுள்ள மூலிகைகளை ஆய்வுக்குள்படுத்தி அதில் இருந்து மருந்துகள் தயாரிக்கும் முயற்சியை ஃபெடரல் யுனிவா்சிட்டி மேற்கொண்டு வருகிறது.
அத்தகைய நடவடிக்கையை இங்கும் முன்னெடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேறாம் என்றாா் அவா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
MBBS
Universities
ஆராய்ச்சி மேம்பாடு: பிரேசிலுடன் தமிழ்நாடு மருத்துவப் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஆராய்ச்சி மேம்பாடு: பிரேசிலுடன் தமிழ்நாடு மருத்துவப் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.