Search This Blog
Sunday, October 20, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் கடந்த சில நாட்களாக போதை மாத்திரைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களாக போதைப் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதிகமாக சப்ளை செய்யப்பட்டு வந்தன. மாலை நேரங்களில் மாணவர்கள் போதை பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஓட்டல் பார்களில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்கள், மீண்டும் மீண்டும் தங்களது பார்களுக்கு வருவார்கள் என்பதால்தான், இதுபோன்ற மாத்திரைகளை சில பார் உரிமையாளர்கள் விற்பனை செய்து வருவாதகவும் கூறப்படுகிறது.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த போதை மாத்திரைகள் பார்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் போதை மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில்தான் அந்த மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இது குறித்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 9 பொட்டளங்களில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அதனை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில் 1.37 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் வயகரா மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொரியர் நிறுவன ஊழியர்களிடம் நடத்திய விசாரணயில், போதை மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று கூறி, போலி ஆவணங்கள் மூலம் கொரியர் நிறுவனத்திடம் ஒப்படைத்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதேபோல், அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து தயாரித்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போதை மாத்திரைகளை கொரியரில் வைத்து விமானம் மூலம் கடத்த முயன்ற 3 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்றும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது தயாரிப்பாளர்களை மட்டும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். தனியார் பார்களிலும் போலீசார் சோதனை நடத்தி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை: அதிர்ச்சி தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.