* பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை தாமதமின்றி அகற்ற வேண்டும். பள்ளிகளில் வழக்கமாக சுத்தம் செய்யப்படும் விவரம் அடங்கிய அறிக்கை மாவட்ட கலெக்டர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் சுத்தம் செய்யும் நிகழ்வு நடத்த வேண்டும்.
* தூய்மை குறித்து மாணவர்களிடையே உணர்த்துவதோடு, பள்ளிகளில் தூய்மைக்காக தூதுவர்களையும் நியமிக்கவேண்டும். 9ம் வகுப்பு மற்றும் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடையே சுகாதார ஊழியர்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காத சூழல், தேங்காய் ஓடுகள், பயன்பாடற்ற கழிவு பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி குழந்தைகள் 5 நாட்களோ அல்லது அதற்கு மேலோ தொடர்ச்சியாக காய்ச்சலால் அவதிப்பட்டால் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெங்கு பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதிகமாக கண்டறியப்பட்டுஉள்ளனர்.சுகாதார பணிடெங்கு பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள், பல்வேறு வகைகளில் உற்பத்தியாவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.சிமென்ட் தொட்டிகள், வாளிகள், கழிப்பறையில் திறந்திருக்கும் தண்ணீர் சேமிக்கும் உருளை, உடைந்த பாத்திரங்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கட்டட பணிகள் ஆகியவற்றின் வழியாக, கொசுக்கள் பரவுவது தெரிய வந்துள்ளது. எனவே, டெங்குவை தடுக்கும் வகையில், பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும், நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். கொசுக்கள் பரவும் வகையில் உள்ள, சிதிலமடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.