எளிய முறையில் கற்பித்தல் எழுத்துகளை அப்படியே சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு பதியாது. சில எளிய வரைபடங்கள் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதேபோல், ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதை தமிழ் எழுத்துகள் மூலமாக கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கினால் சரியான உச்சரிப்பில் படிப்பர். ஆங்கில வார்த்தைகளை தமிழில் அறிவதற்கு 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில அகராதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் முறையும் மாணவர் களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்களே ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் அர்த்தம் கண்டுபிடிப்பர். வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதால், கூடுதல் வகுப்பறைகள் அவசியம்தேவை. நன்கொடையாளர்கள் மூலமாக, புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்றும் அவர் கூறினார். தனியார் பள்ளிகள் பெருகியுள்ள இக்கால கட்டத்தில், அரசுப் பள்ளியை நோக்கி மாணவர் களை இழுத்த பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமியின் முயற்சி பாராட்டத்தக்கது என்றால், அது மிகையாகாது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.