Search This Blog
Wednesday, October 02, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமிப்பதற்கான, உடல் தகுதி தேர்வை, இம்மாத இறுதிக்குள் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில், மின் கம்பம் நடுதல், டிரான்ஸ்பார்மர் நிறுவுதல் உள்ளிட்ட கள பணிகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.இதனால், அந்த பணிகள், ஒப்பந்த ஊழியர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. டெல்டா மாவட்டங்களில், 2018 இறுதியில், 'கஜா' புயல் வீசியது.இதனால், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த, மின் கம்பங்கள் உள்ளிட்ட சாதனங்கள், முற்றிலும் சேதமடைந்தன.அவற்றை சீரமைக்கும் பணியில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் ஊழியர்களும் அடங்குவர்.இதையடுத்து, கள பணிகளை விரைவாக மேற்கொள்ள, கேங்மேன் என்ற பதவியை ஏற்படுத்தி, 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது.இது குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டு மார்ச்சில் வெளியானது. இதற்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு. மொத்தம், 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேங்மேன் பதவிக்கு வந்த விண்ணப்பங்கள், மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள், உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, எழுத்து தேர்வும் நடத்தி, தகுதியான நபர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
5,000 'கேங்க் மேன்' நியமிக்க விரைவில் உடல் தகுதி தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.