பள்ளி கல்வி அதிகாரிக்கு தேசிய அளவில் பதவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 02, 2019

Comments:0

பள்ளி கல்வி அதிகாரிக்கு தேசிய அளவில் பதவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சாரணர் இயக்கத்தின் தேசிய ஆலோசகராக, தமிழக பள்ளி கல்வி முன்னாள் இயக்குனர் இளங்கோவன் நியமிக்கப் பட்டுள்ளார். பாரத சாரண, சாரணியர் இயக்கமான, 'ஸ்கவுட்ஸ் அண்ட் கெய்ட்ஸ்' இயக்கத்தின், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளனர். தேசிய அளவில், சாரணர் பிரிவு தலைமை கமிஷனராக, சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சேத்ரி, சாரணியர் பிரிவு தலைமை கமிஷனராக, மத்திய சுற்றுலா துறை அதிகாரி ரூபிந்தரும் நியமிக்கப் பட்டுள்ளனர். தேசிய அளவில், தலைமையக பொறுப்புகளில், 29 பேர்; தேசிய ஆலோசகர்களாக நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், சாரணர் இயக்க வளர்ச்சிக்கான தேசிய ஆலோசகராக, தமிழக சாரணர் இயக்க கமிஷனர் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக பள்ளி கல்வி இயக்குனராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவில் 4 ஆலோசகர்களை தலைமை அலுவலகம் நியமித்துள்ளது. அவர்களில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநரும் இடம் பெற்றுள்ளார். பாரத சாரண, சாரணியர் இயக்கத்திற்கு தேசிய அளவில் ஆலோசகர்கள் நியமனம் என்பது புதுடெல்லியில் உள்ள தேசிய அளவிலான சாரண சாரணியர் தலைமை அலுவலகம் மூலம் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில், தற்போது தேசிய அளவிலான ஆலோசகர்கள் நியமித்து புதுடெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில் தேசிய அளவிலான நிதி ஆலோசகராக குஜராத்தை சேர்ந்த ஜனார்த்தன்பாய், தேசிய ரயில்வே விவகார ஆலோசகராக தென் கிழக்கு ரயில்வேயின் ஜெயந்த்குமார் சாகா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அளவிலான சாரண சாரணியர் வளர்ச்சி ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநரும், தற்போதைய பாரத சாரண சாரணிய மாநில தலைமை ஆணையராகவும் உள்ள இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய வழிகாட்டு ஆலோசகராக டெல்லியை சேர்ந்த மாணிக் பார்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews