👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த 2 ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்தனர்.
வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு நடத்தப்படும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறாவர்களுக்கு, பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சட்டப் படிப்பு முடித்த பின், வழக்கறிஞராக பயிற்சி செய்ய, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு பதிவு செய்த பின், இரண்டு ஆண்டுகளுக்குள், பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்ய முடியாது.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழில் புரிவதை, பார் கவுன்சில் நிறுத்தி வைக்கும்.பார் கவுன்சில் ஆவணங்களை பரிசீலித்த வகையில், ௨௦௧௦ ஜூலைக்கு பின் பதிவு செய்தவர்களில், ௧,௫௪௭ பேர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதது தெரிய வந்துள்ளது.
தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியல், பார் கவுன்சில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.வழக்கறிஞர் சங்கங்களுக்கும், பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக, பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான ஆதாரங்களை உடனடியாக அனுப்பும்படி, இறுதி நோட்டீசும் பிறப்பித்துள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கையாக, இவர்கள் வழக்கறிஞராக தொழில் புரிவதை, பார் கவுன்சில் நிறுத்தி வைக்கும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தடையை பார் கவுன்சில் நீக்கி விடும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.