👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உடுமலை:உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகள் மற்றும் மலைவாழ் பகுதி பெற்றோருக்கும், உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு, அடிப்படை கல்வி கிடைக்கும் வகையில், உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் படிக்கின்றனர். வகுப்பறையாக மட்டுமின்றி, அவர்களுக்கான தங்கும் விடுதியாகவும் அவை உள்ளன.விடுமுறை நாட்களில் மட்டுமே, குழந்தைகள் அவர்களின் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். காலையில் பள்ளிக்கு சென்று, மாலையில் வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளுக்கு, உளவியல் ஆலோசனை அவசியமாக உள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் தங்கியிருக்கும் குழந்தைகளும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்பள்ளிகளில் உள்ள குழந்தைகள், மலைவாழ் பகுதியை விட்டு, பள்ளியின் சூழலை ஏற்றுக்கொள்வதற்கு, அதிக நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர்.இந்த மாணவர்களை, ஐந்தாண்டு வரை, இடைநின்றலின்றி படிக்க வைப்பது அப்பள்ளி ஆசிரியர்களுக்கு சவாலாகவே உள்ளது. பெண் குழந்தைகளும் இருக்கும் இப்பள்ளிகளில், பராமரிப்பாளர் உட்பட தலைமையாசிரியர் வரை அனைவரும் ஆண்களாக இருக்கும் பள்ளிகளும் உள்ளன.பெற்றோரை பிரிந்திருக்கும் இக்குழந்தைகளுக்கு, உளவியல் ரீதியாக பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உளவியல் நிபுணர்கள் மூலம் வழிகாட்டுதல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.குழந்தைகளின் பெற்றோருக்கு, தொடர்ந்து மற்ற அரசு பள்ளிகளைப் போல, கூட்டங்கள் நடத்தப்படுவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டுமென என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U