👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வட்டார தலைநகரங்களில்செப்., 6 ல் கண்டன ஆர்ப்பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில்நடந்தது. மாநில அமைப்பின் வழிகாட்டிதலின் படி போராட்டம் நடத்துவதற்கானஆலோசனை நடத்தப்பட்டது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூக்கா குமாரவேலு தலைமைவகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு எமர்சன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், முருகேசன், சிவபாலன், குமார்ஆகியோர் பேசினர்.செப்., 6 ல் வட்டார தலைநகரங்களில் கூட்டமைப்பு சங்கங்களின்தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதற்கான ஆலோசனை கூட்டம் செப்., 4ல் நடத்துவது, என தீர்மானிக்கப்பட்டது. பழைய பென்ஷன் திட்டத்தினை மீண்டும்நடைமுறைப்படுத்துவது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்வது. மாணவர்கள் எண்ணிக்கையை காரணம்காட்டி பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் அரசுப்பள்ளிகளை மூடும் முடிவை கைவிடவேண்டும். அரசாணை 145 ஐ திரும்பப்பெற வேண்டும், தேசிய கல்வி கொள்கைவரைவுத்திட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும், ஆகிய ஐந்து அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மாவட்டச்செயலாளர் முத்துமுருகன் நன்றி கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U