👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்த வருடம் மார்ச் மாதம் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் உலகின் முதல் மடக்கு போனான சாம்சங் போல்ட்பிள் போனை அறிமுகம் செய்தது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான அந்த ஸ்மார்ட்போன் ஜூலை மாதமே வெளியாகும் என்று அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சில தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
Samsung Galaxy Fold launch date announced
யோன்ஹாப் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி வருகின்ற வெள்ளிக் கிழமையன்று (06/09/2019) இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பெர்லினில் நடைபெறும் ஐ.எஃப்.ஏ மாநாட்டில் வெளியாகும் இந்த போன் அதே நாளில் கொரியாவிலும் வெளியாக உள்ளது.
மிகவும் விலையுயர்ந்த போனாக கருதப்படும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே விற்பனை செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் 1900 டாலர்களுக்கு விற்பனையாக உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்ற நிலையிலும் கூட, விற்பனைக்கு விரைவாக வர இருப்பதை அறிவிக்கும் வகையில் இந்திய சாம்சங் இணையத்தில் இந்த போனின் சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த் ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸுடனான போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் அந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U