👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதித் சூர்யா குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதித் சூர்யாவின் குடும்பத்தார் பயன்படுத்திய செல்போன் தொலைத் தொடர்புகளை அடிப்படையாக வைத்து அவர்கள் திருப்பதிக்குச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், தாய் ஆகியோரை தேனி காவல்துறை தனிப்படையினர் கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி காவல்நிலையத்தில் உதித் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு உதித் சூர்யா ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.