அபராதம் அதற்கு மேல் அதிகமாக பயன்படுத்தினால், பயன்படுத்துபவர்களின் வங்கிக் கணக்கில் இருந்தே வங்கிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கின. மிகக் குறிப்பாக ATM இயந்திரங்களின் கோளாறு மற்றும் பணம் இல்லாதது போன்ற ஏடிஎம் இயந்திரப் பிரச்னைகள் ஏற்பட்டு பரிமாற்றத்தை முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் கூட, அந்தப் பரிமாற்றத்தையும் ஒரு பரிமாற்றமாக கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் தொடர்ந்து ஆர்பிஐ கவனத்துக்கு வந்த பின் தான் இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
1. ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பேலன்ஸ் பார்ப்பது, காசோலை ஆர்டர் செய்வது, வரி செலுத்துவது
2. வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வது
3. வங்கி ATM இயந்திரக் கோளாறு காரணமாக பணம் எடுக்க முடியாமல் போவது
4. வங்கி ATM இயந்திரத்தில் போதிய பணம் இல்லாததால் பணம் எடுக்க முடியாமல் போவது... போன்ற ATM பரிவர்த்தனைகள் எல்லாம், வங்கி நமக்கு வழங்கி இருக்கும் மாதம் எட்டு இலவச ATM பரிமாற்றங்கள் கணக்கில் வரக் கூடாது. இதை ஒரு ATM பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதல் கட்டணங்களையும் கட்டாயம் வசூலிக்கக் கூடாது என்கிற ஆர்பிஐ சுற்றறிக்கை.
புகார் இப்போது ஒருவர் கனரா வங்கியின் டெபிட் (ஏடிஎம்) கார்டை பயன்படுத்துகிறார். கடந்த ஆகஸ்ட் 2019-ல் ஏடிஎம் மாதாந்திரக் கட்டணம் 35.40 ரூபாய் மற்றும் மாதாந்திர அலெர்ட் கட்டணமாக 11.80 ரூபாய் போக ஏடிஎம் கூடுதல் கட்டணமாக (பணம் எடுத்ததற்கு) 20 ரூபாய் ஒரு முறை மற்றும் ஏடிஎம் கூடுதல் கட்டணமாக (பணம் எடுக்காமல் மற்ற பரிமாற்றங்கள்) 8 ரூபாய் என இரண்டு முறை கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது இந்த 20 ரூபாய் மற்றும் 8 ரூபாய் கூடுதல் ஏடிஎம் கட்டணம் ஏன் வசூலித்தார்கள் எனப் பார்க்க வேண்டும்.
2. ஆகஸ்ட் 15, 2019-க்கு முன்பே எட்டு முறை ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்திவிட்டீர்களா..?
3. ஆம் என்றால் எத்தனை முறை பணம் எடுத்தீர்கள்..?
4. எத்தனை முறை பணம் எடுக்காமல் மற்ற சேவைகளுக்காகப் பயன்படுத்தினீர்கள்..? ஆகஸ்ட் 15, 2019-க்கு முன் எத்தனை முறை ஆகஸ்ட் 15,2019-க்குப் பின் எத்தனை முறை..? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் தகுந்த ஆதாரத்துடன் விடை இருக்க வேண்டும். நீங்கள் எட்டு முறைக்கு மேல் பணம் எடுத்து இருந்தால் (ஆகஸ்ட் 15, 2019 முன் பின் தேவை இல்லை) அந்த 20 ரூபாய் கூடுதல் ஏடிஎம் கட்டணம் விதித்தது சரி தான்.
ஆகஸ்ட் 15, 2019 ஒருவேளை நீங்கள் இந்த எட்டு முறை பரிமாற்றத்துக்குப் பிறகு பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளை ஆகஸ்ட் 15, 2019-க்கு முன்பே செய்துவிட்டீர்கள் என்றால் அந்த 8 ரூபாய் கட்டணம் விதித்தது கூட சரி தான். ஒருவேளை ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பணம் எடுக்காத ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் வசூலித்து இருந்தால், மேலே கொடுத்த ஆர்பிஐ சுற்றறிக்கை மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனை ஆதாரத்துடன் வங்கியிடம் பேசுங்கள் நிச்சயமாக வங்கி விதித்த கட்டணத்தை பின் வாங்க வாய்ப்புகள் அதிகம். எனவே மக்களே, இனியும் வங்கிகள் உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்காதீர்கள். நம் பணம் நம் உரிமை.