துணை மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2019

துணை மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துணை மருத்துவ சார்ந்த பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் என 22 படிப்புகளுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துமனை வளாகத்தில் நாளை தொடங்குகிறது.பி.எஸ்சி நர்சிங், பிஏஎஸ்எல்பி, பிபிடி, பி.எஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி கார்டியோ பல்மனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, பிஎஸ்சி டயலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்சி ஆபரேசன் அன்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி உள்பட 22 துணை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிந்தது. அதில் 23,778 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்பட்டு 22,155 பேர் கொண்ட தரவரிசைப்பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. நாளை காலை 9.30 மணிக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கும், 10 மணி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப்பிரிவின் முதல் நாள் கலந்தாய்வில் 1,223 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews