👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சவுந்தர்ராஜனின் கல்விப்பணியை பாராட்டி முன்னாள் மாணவர்கள் விழா நடத்தினர்.
கடந்த 2003-2004ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் நடத்திய பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு, தலைமையாசிரியர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.முதுகலை வரலாறு ஆசிரியர் வரதராசு, பொருளியல் ஆசிரியர் சேகர், தொழிற்கல்வி ஆசிரியர் செல்வம் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பூபதி வரவேற்றார்.தொழிற்கல்வி ஆசிரியர் சவுந்தர்ராஜன் 32 வருட கல்விப்பணியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர். நல்லாசிரியர் விருதுபெற்ற புதுச்சேரி கணுவாய்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை அருண்மொழி சவுந்தராஜனுக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கினார்.முதுகலை இயற்பியல் ஆசிரியர் குமரவேல், பட்டதாரி ஆசிரியர்கள் ஞானவேல், உமாமகேஸ்வரி, மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கென்னடி, புதுச்சேரி போக்குவரத்து போலீஸ்காரர் ரகுமான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.விழாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளி வாழ்க்கையில் சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U