பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 17, 2019

பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விக்கிரவாண்டியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. சூர்யா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ஞானமணி வரவேற்றார் செயல் அறிக்கையை மாநில பொதுச் செயலர் (பொறுப்பு) சேதுசெல்வம் சமர்பித்தார். வரவு, செலவு கணக்கை மாநில பொருளாளர் பாஸ்கரன் சமர்பித்தார்.பொதுக்குழுவில் சிறப்புரையாற்றிய நிறுவனத் தலைவர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2019ஐ எங்களது அமைப்பு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வரக்கூடிய கல்வி முறையாக உள்ளது.மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், தொடர்ந்து கல்வி கற்கக்ககூடிய வாய்ப்பை பறிப்பதற்கும் தான் இந்த கல்விக் கொள்கை பயன்படும். 3, 5, 8, 10, 11ம் வகுப்பு தேர்வு என நடத்துவதற்குத்தான் இந்த கல்விக் கொள்கை பயன்படுகிறதே தவிர மாணவர்களின் அறிவாற்றலைப் பெருக்க வழி வகுப்பதில்லை. எனவே, இதை முழுமையாக நிராகரிக்கிறோம்.மத்திய அரசு இந்த கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டுகிறோம். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 145 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தக் கூடிய அரசாணையாக உள்ளதால் அதை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என ஒருபக்கம் பெரிய மாவட்டங்களை சிறிய மாவட்டங்களாக பிரிக்கின்றனர். ஆனால் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.இவ்வாறு மாயவன் கூறினார்.மாநில தணிக்கையாளர் துளசிங்கம், மாவட்ட தலைவர் வில்வபதி, பொருளாளர் இந்திரன், பாலு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews