மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2019

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 மாணவர்களில் பலர் பதில்மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநிலத்தவருக்கும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. எனவே 2019-2020 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் , இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பட்டியலை வெளியிட்டு அதனடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலதா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 126 மாணவர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு, நீதிபதி எம்.சுந்தர் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 பேரில் பலர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அவர்கள் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையை வரும் 16 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews