👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விடுதி கிடைக்காமல் பரிதவிக்கும் மலைவாழ் மாணவியர், ஒன்பது பேர், பள்ளி படிப்பை தொடர்வதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், ஒன்பது பேர், நேற்று, கலெக்டர் ராமனிடம் மனு அளித்தனர்.பின், அவர்கள் கூறியதாவது:மலைவாழ் இனத்தைச் சேர்ந்த நாங்கள், அரசு பெண்கள் விடுதியில் தங்கி, ஒன்பது, 10ம் வகுப்பு முடித்தோம். தொடர்ந்து, அதே பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறோம். விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பித்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.இதனால், சொந்த ஊரான, மேல் வாழப்பாடி, கீழ்தெரு கிராமத்தில் இருந்து, தினமும் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கான ஒரு நாள் பயண செலவு, 150 ரூபாய் ஆகிறது.மேலும், குறிப்பிட்ட நேரத்தில், பஸ் வசதி இன்றி அவதிப்படுகிறோம். பள்ளி படிப்பை தொடர்வது கேள்விக்குறியாக உள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த நாங்கள், தினமும் செலவு செய்து பள்ளிக்கு வர முடியாத நெருக்கடி உள்ளது.இது தொடர்பாக, பலமுறை முறையிட்டும், பள்ளி நிர்வாகமும், விடுதி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, உடனடியாக விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U