👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.
மாநிலம் முழுவதும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள 15 ஆயிரத்து 836 இடங்களில் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் 700க்கும் மேற்பட்ட இடங்களும் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் மொத்தம் 11 ஆயிரத்து 984 இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
M.E/M.Tech படிப்புகளை முடித்தால் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம். ஆனால் தற்போது உள்ள நிலையில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக குறைவாக உள்ள காரணத்தால் உதவிப் பேராசிரியர்களுக்கு போதுமான சம்பளங்கள் கொடுக்கப்படுவதில்லை.
இதனால் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக B.E., B.Tech., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U