👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து பள்ளிகளிலும் 5நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மர்மகாய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் மக்களிடம் உள்ளது. இதையடுத்து மர்ம காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து 5நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட சித்த அலுவலர் செல்வமூர்த்தி கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம மருந்தகம் என அனைத்து பகுதிகளிலும் வரும் பொதுமக்கள், நோயாளிகளுக்கு நிலவேம்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களில் மட்டும் 500 கிலோ நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நிலவேம்பு குடிநீரை அருந்தி, பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.