தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 4 எழுத்துத் தேர்வை 13.52 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவுக்குள் 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுத 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டன.
பெண்களே அதிகம்: தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டோரில் பெண்களே அதிகமாவர். அதாவது 9 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேர் பெண்களும், 7 லட்சத்து 9 ஆயிரத்து 103 பேர் ஆண்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 21 ஆயிரத்து 996 மாற்றுத் திறனாளிகளும், 36 மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு பெற்றிருந்தனர். தேர்வுக்காக 301 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 இடங்களில் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்காக தேர்வாணையத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் பிரச்னைக்குரிய பகுதிகளாக கண்டறியப்பட்ட 19 இடங்கள் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டன. சென்னையில் 405 இடங்களில் தேர்வு நடந்தது. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
மொத்தம் எத்தனை பேர்: குரூப் 4 எழுத்துத் தேர்வை தமிழகம் முழுவதும் 83 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையுடன் கணக்கிட்டு பார்க்கும் போது, தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 52 ஆயிரத்து 70 ஆகும். குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இந்த வாரத்துக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடைகளில் ஏதும் தவறுகளோ அல்லது திருத்தங்களோ இருந்தால் அதனை உரிய ஆதாரங்களுடன் தேர்வாணையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்க தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுவர் எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்-பொது அறிவு: குரூப் 4 எழுத்துத் தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 1 மணி வரை நடந்தது. பொது அறிவில் இருந்து 75 கேள்விகளும், திறனறி பிரிவில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்பட்டன. தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் எதை விருப்பமாக தேர்வர்கள் தேர்வு செய்தார்களோ அதிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டன. அதிகபட்ச மதிப்பெண்கள் 300 ஆகும். தேர்ச்சிக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 90 எடுக்க வேண்டும். இது அனைத்து வகுப்பினருக்கும் பொதுவானதாகும். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள்
குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் மிகவும் சிக்கலான முறையில் யோசித்து பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வில் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், நேரடியாக பதில் அளிக்கக் கூடிய வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கணிதத்தில் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். புதிய பாடத் திட்டத்தின் கீழ் அதிகமாகப் படித்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தேர்வர்கள் கூறினர்
குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 13.59 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 209 பேர் போட்டியிடுகின்றனர். தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 2,688, தட்டச்சர், இளநிலை உதவியாளர்(பிணையம்)-104, வரிதண்டலர் (கிரேடு 1)-34, நில அளவர்-509, வரைவாளர்-74, தட்டச்சர்-1,901, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-784 என மொத்தம் காலியாக உள்ள 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அறிவித்தது.தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சுமார் 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,783 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பெண்கள் 9,20,925 பேர், ஆண்கள் 7,09,103 பேர், மூன்றாம் பாலினத்தவர் 36 பேர், 21,996 மாற்றுத்திறனாளிகள், 6,380 பேர் ஆதரவற்ற பெண்கள், 5,387 முன்னாள் படைவீரர்கள் அடங்குவர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான எழுத்து ேதர்வு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 5,575 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை கண்காணிக்க ஒரு மையத்துக்கு ஒருவர் வீதம் 5,575 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதை தவிர்த்து 81,500 கண்காணிப்பாளர்கள், 5,575 சோதனை நடத்தும் ஊழியர்கள், 6,030 நடமாடும்குழுக்கள், 567 பறக்கும் படையினர் என தேர்வு பணி, கண்காணிப்பு பணி என சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள 405 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,25,281 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. குரூப் 4 தேர்வை 13,59,307 பேர்( 83.4 சதவீதம்) பேர் தேர்வு எழுதியுள்ளனர். எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் பெற்றோரிடம் தங்கள் குழந்தையை ஒப்படைத்து சென்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பதற்றமானதாக கருதப்பட்ட 11 இடங்களில் வெப்கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரணமாக ஒரு பணிக்கு குறைந்தபட்சம் 50 பேர் தான் போட்டியிடுவார்கள். ஆனால், குரூப் 4 தேர்வில் ஒரு பணிக்கு 209 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
வினாக்கள் எளிதாக இருந்தது
தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது: தேர்வில் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. கடந்த முறை டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வில் இருந்தும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நாட்டு நடப்புகள் குறித்தும் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல், எப்போது “ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?. ஜி.எஸ்.டி. இந்தியாவில் எப்போது நடைமுறைக்கு வந்தது?., ஜி-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எந்த சதவீதத்தில் இருக்கும்” என மத்திய அரசு சார்ந்த கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. கணக்கு பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
2.70 லட்சம் பேர் ஆப்ெசன்ட்
குரூப் 4 தேர்வு எழுத 16,29,864 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 83.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது, 13,59,307 பேர் மட்டுமே தேர்வு எழுது வந்துள்ளனர். 16.6 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 2 லட்சத்து 70 ஆயிரத்து 557 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U