ரேஷன் கார்டு தொலைத்தோருக்கு 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 10, 2019

ரேஷன் கார்டு தொலைத்தோருக்கு 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, 20 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டு வழங்கும் சேவையை, முதல்வர், இ.பி.எஸ்., விரைவில் துவக்கி வைக்க உள்ளார். தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, உணவு வழங்கல் துறை சார்பில், பயனாளிகளுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த கார்டை தொலைத்தவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள கார்டில் திருத்தங்கள் செய்தவர்களுக்கு, அரசு, 'இ - சேவை' மையங்களில், 30 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டுகள் வழங்கப்பட்டன.ஆனால், சேவை மைய ஊழியர்கள், அதிக கட்டணம் வசூலித்ததால், 2018லிருந்து, மாற்று கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.பலரும், மாற்று கார்டு கேட்டு, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாற்று ரேஷன் கார்டுகள், உணவு வழங்கல் மாவட்ட அலுவலகங்களில், அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன.இதற்காக, சென்னைக்கு இரண்டு; மற்ற மாவட்டங்களுக்கு, தலா, ஒன்று என, கார்டு அச்சடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கார்டு அச்சிடும் கருவியில், மென்பொருள் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.வெளிநாட்டில் இருந்து, முதல்வர், இ.பி.எஸ்., இன்று சென்னை திரும்புகிறார். ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, 20 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டு வழங்கும் சேவையை, அடுத்த சில நாட்களில், அவர் துவக்கி வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews