நிழல் இல்லாத ராமேஸ்வரம்; மாணவர்கள் வியப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

நிழல் இல்லாத ராமேஸ்வரம்; மாணவர்கள் வியப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆண்டில் இருமுறை சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும் போது, நிழல் எந்த பக்கமும் சாயாமல் நம் காலடியில் இருக்கும். இதனை 'நிழல் பூஜ்ஜியம்', 'நிழல் இல்லாத நாள்'என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது அனைத்து இடங்களிலும் ஓரே நாளில் நிகழ்வதில்லை. சூரியன் வடக்கு நகர்வு, தென் நகர்வு என ஆண்டுக்கு இருமுறை இச்சம்பவம் நிகழும். அதன்படி நேற்று ராமேஸ்வரத்தில் நிழல் இல்லாத நாள் ஏற்பட்டது.இதனை நேற்று ராமேஸ்வரம் புதுரோடு அரசு உயர்நிலைபள்ளி அறிவியல் இயக்க மாணவர்கள், பள்ளி வளாகத்தில் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், டப்பாவை வைத்து பகல் 11:30 வரை சூரிய ஒளிக்கதிரை மாணவர்கள் குறிப்பெடுத்தனர். பின் பகல் 12:14 மற்றும் 12:25 மணிக்கு நிழல் இல்லாத நேரத்தை கண்டு மாணவர்கள் வியப்பு அடைந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல், பள்ளி அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெரோம், ஆசிரியர் ஜலிலா செய்திருந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews