குழந்தைக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

குழந்தைக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வெது வெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைத்தால் வயிற்றின் தசைகள் தளர்த்து மலம் எளிதாக கழிக்க உதவும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு. மலம் வயிற்றுக்குள்ளேயே இறுகினால் அதனால் வரும் ஆப்பத்துகள் பெரியது. எனவே உடனே வீட்டு குறிப்புகளை வைத்து சரி செய்வது அவசியம். பொதுவாக மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, உணவு சமநிலையின்மை, நார்ச்சத்து குறைபாடு, உடல் நீர் வற்றுதல், உணவில் மாற்றம், தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் கொடுப்பது என இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. அவ்வாறு உங்கள் குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் மலம் கழிக்கும் போது அழுதல், அசௌகரியமான பாவனைகளை வெளிப்படுத்துதல் போன்றவை செய்யும். குழந்தை கழிக்கும் மலத்தின் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட குறைவான உணவு உண்ணுதல், வயிறு கெட்டியாக இருத்தல் போன்றவை மலச்சிக்கலுக்கான அறிகுறிகளாகும்.
மலச்சிக்கலால் குழந்தை பாதிக்கப்படிருப்பதை உறுதி செய்தபின் மலச்சிக்கலால் பாதிக்கப்படும்போது கால்களை நீட்டி மடக்குதல், தூக்கி நிறுத்தி கால்களை உதர வைத்தல் போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் மலம் கழிக்க குழந்தைக்கு ஏதுவாக இருக்கும். வெது வெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைத்தால் வயிற்றின் தசைகள் தளதளத்து மலம் எளிதாக கழிக்க உதவும். இதனால் குழந்தையின் அசௌகரிய நிலைக்கும் இதமாக இருக்கும். உணவில் மாற்றத்தை செய்யலாம். உதாரணமாக தினமும் கொடுக்கும் மாட்டுப் பால் , பால் உணவு போன்றவற்றை தவிர்த்து மாறாக நார்ச்சத்து , நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தரலாம். உடல் நீர் ஏற்ற முறையும் குழந்தைக்கு மலச்சிக்கலை போக்கும். அதற்கு தாய்ப்பாலே போதுமானது. ஒருவேளை தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் ஆப்பிள், கேரட் போன்ற நீர்ச்சத்து உணவுகள், தண்ணீர் போன்றவை கொடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனைபடி பழச்சாறும் அருந்தக் கொடுக்கலாம். மசாஜ் செய்வதும் குழந்தையின் மலச்சிக்கலை இலகுவாக்கும். வயிற்றுப் பகுதியில் கடிகார வட்டப்பாதையில் சுற்றிலும் தடவி விடுங்கள். கால்களை மடக்குதல் என குழந்தைக்கு சவுகரியமான மசாஜ் படிகளை மேற்கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட எதுவும் பலனளிக்கவில்லை எனில் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews