தேசிய வரைவு கல்விக்கொள்கையில் இறுதி முடிவு எப்போது?மத்திய அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 17, 2019

தேசிய வரைவு கல்விக்கொள்கையில் இறுதி முடிவு எப்போது?மத்திய அரசு தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்து நாடாளுமன்ற விவாதத்திற்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, சோனை நகரைச் சேர்ந்த வக்கீல் பகவத்சிங், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய வரைவு கல்விக்கொள்கை 2019, கடந்த மே 30ல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சரியான முடிவு எடுப்பது என்பது மாணவர்களின் நலன் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் மிகவும் முக்கியமானது. தேசிய வரைவு கல்விக்கொள்கை மீதான தங்களது கருத்தை தெரிவிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. எதிர்கால சந்ததியினரின் நலனில் அக்கறை கொண்டது என்பதால் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுகுறித்த பொது விவாதம் முக்கியம். மேலும் பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இவற்றை முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டுமே பொதுமக்களின் கருத்துக்களை முன் வைக்க முடியும். ஆனால், தேசிய வரைவு கல்வி கொள்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை அரசியலமைப்பு சட்டத்தின் 8ம் அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வெளியிட வேண்டியது அவசியம். அப்போதுதான் பெரும்பாலானவர்கள் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து சரியான முடிவெடுக்க இயலும். இந்தியாவின் அடையாளமான பன்மொழித்தன்மையை பாதுகாப்பது அவசியம். வெளிப்படையான கருத்துக்கேட்பு நடைபெற்றால்தான் குறைகளை களைந்து வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைத்து எடுக்கப்படும் முடிவு தொடர்பான நடவடிக்கைகள், அதன் உரிமை மற்றும் பொறுப்புகள், தேவைப்படும் காலம், எதிர்பார்க்கப்படும் விளைவு போன்றவை அனைவரும் அறியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும். இவற்றில் தவறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். எனவே, தேசிய வரைவு கல்விக்கொள்கையை குறிப்பிட்ட இரு ெமாழிகளில் மட்டும் வெளியிட்டது ஏற்புடையதல்ல. பிற மொழி பேசுவோரை ஒதுக்குவதாகும். எனவே, தேசிய வரைவு கல்விக்கொள்கையை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியிடவும், அதுவரை தேசிய வரைவு கல்விக்கொள்கையை செயல்படுத்தவும் தடை விதிக்க வேண்டும். வெளிப்படையான கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலர் தேவேந்திரகுமார் ஷர்மா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய வரைவு கல்வி கொள்கையின் அறிக்ைக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிட முடியாது. தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளில் தேசிய வரைவு கல்வி கொள்கையின் சுருக்கம் தயாரிக்கப்பட்டு அமைச்சகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. கொங்கனி, நேபாளி, போடோ மற்றும் சிந்தி ெமாழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இதுவரையில் சுமார் ஒரு லட்சம் பேர் தங்களது கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டிருந்தது. மேலும், தேசிய வரைவு கல்விக் ெகாள்கை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆலோசனை முடிந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பிறகே, தேசிய வரைவு கல்வி கொள்கை தொடர்பான நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர்கள், மத்திய, மாநில மாற்றுத்தினாளிகள் நல கமிஷனர்கள் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.19க்கு தள்ளி வைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews