ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச பொறியியல் கல்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 15, 2019

ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச பொறியியல் கல்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தாம்பரம் அடுத்த படப்பை, பனப்பாக்கம் ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனம் 100 ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவச பொறியியல் கல்வி வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து கல்வி அறக்கட்டளை தலைவர் ஆர்.விவேகானந்தன் கூறியதாவது: தாம்பரம் அடுத்த படப்பை, பனப்பாக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறோம். கல்லூரியின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 100 ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம், பஸ் கட்டணம் இல்லாமல் இலவசமாக பொறியியல் கல்வி வழங்க முன்வந்துள்ளோம். தகுதி உள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பனப்பாக்கம், படப்பை என்ற முகவரிக்கு நேரில் வந்து சேர்க்கை பெறலாம்.எங்களது பொறியியல் கல்லூரியில் பி.இ, சிஎஸ்இ, மெக்கானிக்கல், இசிஇ, சிவில், இஇஇ, பி.டெக், ஐடி, பேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94448 64288, 9710119126 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews