பல்கலைக்கழகத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 14, 2019

பல்கலைக்கழகத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருமாவளவன் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி ருந்த மனு:தமிழகத்தில் 21 அரசு பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் போன்ற பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்பும் போதும் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர் பதவி களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போதும் தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண் களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் உள்ள மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 துணைவேந்தர் பதவிகளும் பெண்களுக்கு 7 பதவிகளையும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அதுபோல உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை. எனவே, இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கும் சிறுபான்மையினருக்கும் பெண் களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.பழனிமுத்து ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்ப தாவது பல்கலைக்கழகங்களில் உள்ள பதவிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையை கொண்டு வர வேண்டும். அதேநேரம் பல்கலைக் கழகங்களில் உள்ள துணைவேந்தர் பணியிடம் என்பது தேர்வு அடிப் படையில் நிரப்பப்படுபவை என்ப தால், அதற்கு இடஒதுக்கீடு கோர முடியாது. எனவே, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர் உள் ளிட்ட பிற பதவிகளை நிரப்பும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பாக மனுதாரரின் கோரிக் கையை தமிழக அரசு 2 மாதத்தில் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் படி எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 துணைவேந்தர் பதவிகளும் பெண்களுக்கு 7 பதவிகளையும் வழங்கி இருக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews