பள்ளி சேர், பெஞ்ச்களை எடுத்து செல்ல முயன்ற உதவி தலைமை ஆசிரியர்: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

பள்ளி சேர், பெஞ்ச்களை எடுத்து செல்ல முயன்ற உதவி தலைமை ஆசிரியர்: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு பெண்கள் பள்ளியில் சேர், பெஞ்ச்களை ஆட்டோவில் ஏற்றி செல்ல முயன்ற உதவி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், பொய்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 27ம் தேதி தாமதமாக வந்த 12ம் வகுப்பு மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்கியதாகவும் உதவி தலைமை ஆசிரியை புவனா மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியை மேரி ஜோசப்பை காவேரிப்பாக்கம் நாகவேடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், உதவி தலைமை ஆசிரியை புவனாவை குடியாத்தம் அக்ராவரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்து முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு லோடு ஆட்டோவை கொண்டு வந்து, அதில் உதவி தலைமை ஆசிரியை புவனா, பள்ளியில் இருந்த 60க்கும் மேற்பட்ட சேர்கள், பெஞ்ச்களை ஏற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விஏஓ அனுசுயா மற்றும் போலீசார் விரைந்து வந்து எந்தவித அனுமதியும் இன்றி பள்ளியில் இருந்து பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்ற னர். அதற்கு அவர், இவை அனைத்தும் எனது பணத்தில் வாங்கியது. அதனால்தான் எடுத்து செல்கிறேன் என்றாராம். அதற்கு, நீங்கள் வாங்கியதற்கான ஆதாரங்களை கொடுத்து விட்டு பொருட்களை எடுத்து செல்லுங்கள் என விஏஓ கூறினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உதவி தலைமை ஆசிரியை புவனா அங்கிருந்து சென்றார். பின்னர் மக்களே ஆட்டோவில் இருந்த பொருட்களை இறக்கி மீண்டும் பள்ளிக்குள் வைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews