👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் பள்ளி மாணவர் களின் கல்வித்திறனை வளர்க் கும் வகையில் கல்வி தொலைக் காட்சி என்ற பெயரில் தனிப் பட்ட தொலைக்காட்சி அலை வரிசை தமிழக அரசால் உருவாக் கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தின் 8-வது தளத்தில், இதற்கான படப்பிடிப்பு அரங்கு, ஒளிப்பதிவு, நிகழ்ச்சி தயாரிப்பு கூடம் செயல்படுகிறது. மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கல்வி தொலைக்காட் சிக்கான கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தக் கல்விச் சேனலை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கடந்த 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த கல்வி தொலைக்காட்சி டி.டி.ஹெச், முன்னணி கேபிள் டிவி, ஆன்லைன் மற்றும் யூ டியூப் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. எனவே, மாணவர்கள் பள்ளியில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கல்வி தொலைக்காட்சியை பார்க்கலாம்.
அரசு கேபிள் டிவியில், எண் 200-ல் இந்த கல்வி தொலைக் காட்சி இடம்பெற்றுள்ளது. கேபிள் வசதி இல்லாத பள்ளிகளில் யூ டியூப் மூலம் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்ப ஏதுவாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட் டுள்ளது. இருப்பினும் பெரும்பா லான அரசுப் பள்ளிகளில் இணைப்பு கொடுக்கப்படவில்லை. ஊரகப் பகுதிகளில் எந்தப் பள்ளி யிலும் இணைப்பில்லை. நகர் புறங்களில் ஒன்றிரண்டு பள்ளி களில் மட்டும்தான் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தொடக்க விழா அன்று யூ டியூப் மூலம் ஒளி பரப்பியுள்ளனர். அதன்பிறகு யாரை தொடர்புகொண்டு கேபிள் இணைப்புப் பெறுவது. யார் பணம் செலுத்துவது என்ற விவரம் தெரியாததால், அவர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். கேபிள் இணைப்பு பெறுவதில் சிக்கல் இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவிக் கின்றனர்.
கேபிள் இணைப்புக்கான செட்டாப் பாக்ஸ் கொடுத்தாலும், பள்ளிகளின் தொலைவைக் காரணம் காட்டி கேபிள் ஆப்ரேட்டர்கள் கேபிள் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் வரை கேட்கின்றனர். இதற்கு யார் பொறுப்பேற்பது? மாதச் சந்தா உள்ளிட்ட பிரச்சினைகளும் உள்ளதால் ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனு சாமியிடம் கேட்டபோது, ‘‘ஒவ் வொரு பள்ளிக்கும் பராமரிப்புக் காக ரூ.1 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோன்று பெற்றோர் - ஆசிரியர் கழகத் துக்கு போதுமான நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரி யர்களே இந்த நிதியை கேபிள் இணைப்புக்காக முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கேபிள் டிவி வட்டாட்சியர் சீனுவாசனிடம் கேட்டபோது, ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 50 சதவீத பள்ளிகளுக்கு இணைப்பு வழங் கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் மாதச் சந்தா செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ஏற்கெனவே கேபிள் இணைப் புள்ள ஓர் இடத்திலிருந்து 1.கி.மீ தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு இணைப்பு கொடுப்பதில் சிரமம் ஏதுமில்லை. அதற்கு மேற்பட்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கேபிள் அமைக்க செலவாகும் என்பதால், அச்செலவை பள்ளி நிர்வாகம்தான் ஏற்க வேண்டும்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U