நூலகத்தில் மராத்தி எழுத்துப் பயிற்சி: ஆக. 20-க்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

நூலகத்தில் மராத்தி எழுத்துப் பயிற்சி: ஆக. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சரசுவதி மகால் நூலகத்தில் மராத்தி எழுத்துப் பயிற்சி: ஆக. 20-க்குள் விண்ணப்பிக்கலாம் தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் மராத்தி மற்றும் மோடி எழுத்துப் பயிற்சி பெற ஆக. 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நூலக இயக்குநர் (பொ) மற்றும் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது: இந்நூலகத்தில் ஆயிரக்கணக்கான மோடி ஆவண கட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றைப் படித்தறிய மராத்தி மற்றும் மோடி எழுத்தின் பயிற்சியும், மராத்தி மொழியும் அவசியம். இதுபோன்ற எழுத்துகளின் இன்றியமையாமையைக் கருத்தில் கொண்டு, இந்நூலக வளர்ச்சித் திட்டப் பணி நிதியுதவியுடன் ஆக. 27-ஆம் தேதி முதல் செப். 16-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு மராத்தி மற்றும் மோடி எழுத்துப் பயிற்சி வகுப்பு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது. மராத்தி மற்றும் மோடி எழுத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்கள், இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், மராத்தி வரலாறு, சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தில் அல்லது வெள்ளைத் தாளில் தங்களது முகவரி, கல்வித் தகுதி, செல்லிடப்பேசி எண் போன்றவையும், மோடி எழுத்துப் பயிற்சி வகுப்பு என தெளிவாகக் குறிப்பிட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்குச் சேர தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ. 100 பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் - 9 என்ற முகவரிக்கு ஆக. 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 8015304849 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews