பிஎஸ்சிக்கு ரூ.1,700க்கு பதில் ரூ.32 ஆயிரம் வசூலிப்பு அரசு உதவிபெறும் கல்லூரி என்று அறிவிப்பு பலகை வைக்கப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 12, 2019

பிஎஸ்சிக்கு ரூ.1,700க்கு பதில் ரூ.32 ஆயிரம் வசூலிப்பு அரசு உதவிபெறும் கல்லூரி என்று அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ‘அரசு உதவி பெறும் கல்லூரி’ என போர்டு வைக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 133 கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்நிலையில் முக்கிய நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இதை வைத்து கல்லூரி நிர்வாகங்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு, தனியார் பங்களிப்பில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கி வருகிறது. ஆனால் பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் எந்த இடத்திலும் தங்களை அரசு உதவி பெறும் கல்லூரி என்று காட்டிக்கொள்வதில்லை. குறிப்பிட்ட கல்லூரிகளின் போர்டுகளில் எந்த பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரி என்றும், நேஷனல் அசஸ்மென்ட் அக்ரெடிக்சன் கவுன்சில் - NAAC தரச்சான்று பெற்றிருந்ததால் அதை குறிப்பிடுகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி என்பதை குறிப்பிடுவதில்லை.
அரசுக்கல்லூரிகளில் மாணவர்களுக்கு என்ன கட்டணம் வசூலிக்க வேண்டுமோ அதே கட்டணத்தை தான் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டும். கூடுதல் சில கட்டணங்கள் சேர்த்து சில ஆயிரங்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். பி.எஸ்சிக்கு கல்விக்கட்டணமாக ₹1,700ம், ஆனால் ₹32 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கப்படுகிறது. பி.ஏவுக்கு கல்விக்கட்டணமாக ₹1,500ம் வசூலிக்க வேண்டும் ஆனால் 12 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கின்றனர். இக்கட்டணம் விண்ணப்பித்தவர்களுக்கு இடையேயான போட்டியை பொறுத்து பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஆய்வக கட்டணம் உள்பட வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட கல்லூரிகள் அரசுக்கல்லூரிகளை போன்றே, பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து(யுஜிசி) புதிய கட்டிடம் கட்ட, பிற வளர்ச்சி பணிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கு தகுதியுடையவை.
யுஜிசிக்கு கடிதம் எழுதும்போது, கல்லூரி சார்பில் அனுப்பப்படும் கடிதம், பிற ஆவணங்களில் அரசு உதவி பெறும் கல்லூரி என்பதை தவறாமல் குறிப்பிடுகின்றன. வேறு எங்கும் அரசு உதவி பெறும் கல்லூரி என்று குறிப்பிடுவதில்லை. அதே போல், யுஜிசியிடம் பெறும் நிதியில் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கட்டிடத்தை கட்டுகின்றன. இதனால் மாணவர்களுக்கு குறிப்பிட்ட கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியா அல்லது தனியார் கல்லூரியா என்பதே தெரியாத நிலை உள்ளது.தமிழக உயர் கல்வித்துறையை பொறுத்தவரை இவற்றை கண்காணிக்க தனியாக ‘‘மானிட்டரிங் ஏஜென்சி’’ எதுவும் இல்லை. அரசுக்கல்லூரிகளுக்கான உயர் அமைப்பான கல்லூரிக்கல்வி இயக்ககம் இதை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இயக்கக அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews