உச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள்! ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

உச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள்! ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் வணிக ரீதியான ஜியோ ஜிகாஃபைபர் வெளியீட்டு மற்றும் ஜியோபோன் 3 சாதனத்தின் விவரங்களை நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோபோன் 3: திங்கள் அன்று நடைபெறவுள்ள ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஜியோ நிறுவனம் ஜியோபோன் 2 சாதனத்தின் அடுத்த மேம்படுத்தப்பட்ட புதிய ஜெனெரேஷன் ஜியோபோன் மாடலான, ஜியோபோன் 3 சாதனத்தை வெளியிடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோபோன் 3 சாதனம் ஸ்மார்ட்போன் மாடலா?: ஜியோபோன் 3 பற்றிய நம்பகமான முழு விபரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜியோபோன் 3 சாதனம் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி ஜியோபோன் 3 பியூச்சர் போன் மாடலாக தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ ஜிகாஃபைபர் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு நடைபெற்ற ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இருப்பினும் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையின் விரிவாக்கப்பட்ட வெளியீட்டை முழுமையாக இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை.
ஜிகாஃபைபர் திட்டத்தை பயனர்கள் நேரடியாக பெற: ஜியோ மெதுவாக சில நகரங்களில் மட்டும் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை அதிகரித்து வருகிறது, இருப்பினும் இந்த சேவையை தற்பொழுது பயனர்கள் நேரடியாகப் பெறுவதற்கு, எந்த ஒரு அதிகாரப்பூர்வமான வழிகளும் அறிமுகம் செய்யப்படவில்லை. திங்கள்கிழமைக்கு பிறகு ஜிகாஃபைபர் திட்டத்தை பயனர்கள் நேரடியாக பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
ஜிகாஃபைபர் திட்டங்களின் விலைப் பட்டியல்: தற்போதுள்ள ஜியோவின் முன்னோட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை ஜியோ இலவசமாக வழங்கிவருகிறது. இதனால் இன்னும் ஜியோ ஜிகாஃபைபர் திட்டங்களின் விலைப் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஜியோவின் முன்னோட்ட வாடிக்கையாளர்கள் ஜிகாஃபைபர் சேவையைப் பெறுவதற்குத் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.4500 அல்லது ரூ.2500 வசூலிக்கப்பட்டது.
ரூ.600 விலையில் ஜிகாஃபைபர்: அண்மையில் கசிந்த தகவலின்படி, ஜியோ புதிய காம்போ காம்போ திட்டத்தை ரூ.600 என்ற விலையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் ஐபிடிவி சேவையுடன் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிரிபிள் ப்ளே திட்டம் பற்றிய விபரங்களும் கசிந்துள்ளது, இதில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா, ஜியோ ஹோம் ஐபிடிவி சேவை மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஜிகாஃபைபர் சந்தா திட்டங்ள்: ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் ஜியோ நிறுவனம் மூன்று சந்தா திட்டங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை மற்றும் மிகவும் மலிவு திட்டமாக, பயனர்களுக்கு 100Mbps இல் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும். இரண்டாவது திட்டத்தில் இந்த சேவைகளுடன் ஐபிடிவி சேவைக்கான அணுகலும் கிடைக்கும். மூன்றாவது மற்றும் உயர்தர திட்டத்தில் பிராட்பேண்ட் சேவை, ஐபிடிவி சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவைகள் பயனர்களுக்கு வழங்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews