ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 24, 2019

ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது, இந்நிலையில் கூகுள் நிறுவனம் அன்மையில் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குறிப்பாக இந்த புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது இந்நிறவனம். குறிப்பாக அதிக வருடங்களாக கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு இனிப்பு வகைகளின் பெயர்களை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது, இந்நிலையில் பழைய வழக்கத்தை மாற்றி புதிய இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு 10 என அழைப்பதாக தெரிவித்து இருக்கிறது.
லைவ் கேப்ஷன்(Live Caption): ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் லைவ் கேப்ஷன் என்ற வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த வசதி சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு லைவ் வில் என்ன பேசப்படுகிறதோ அது நிகழ்நேரத்தில் கீழே எழுத்துக்களாக காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் மோட்: ஸ்மார்ட்போனை கணினிகளுடன் இணைக்க டெஸ்க்டாக் மோட் எனம் வசதி ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இடம்பெறும்.
நோட்டிபிக்கேஷன் வசதி: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் தோன்றும் நோட்டிபிக்கேஷனை நீங்கள் லாங் பிரஸ் செய்யும் போது, உடனே அவற்றை பிளாக் செய்வது உட்பட பயனுள்ள விருப்பங்கள் அதிகமாக கிடைக்கும்.
புதிய தீமிங் ஆப்ஷன்( New theming options) ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் பல வகையான தீம் அம்சங்கள் வழங்கப்படும், குறிப்பாக உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிகளில் கூட தீம் செட் செய்ய முடியும். குறிப்பாக நீலம், பசுமை, உட்பட 10 நிறங்களில் இந்த தீம் அம்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் மோட் வசதி: இந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் அனைத்து போன்களுக்கு டார்க் மோட் வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூகுள் IOடெவலப்பர் மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட இந்த அம்சத்தை செட்டிங்க்ஸ் ஆப்பில் உள்ள பேட்டரி டேப்பின் கீழ் நீங்கள் காணலாம். கூகுள் நிறுவனம் ஏற்கனவே அதன் பல பயன்பாடுகளில் இந்த அம்சத்தை கொண்டுவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்கேஷன் வசதியில் கூடுதல் சிறப்பு: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் லோக்கேஷன் வசதியில் கூடுதல் சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி லோக்கேஷன் அனுகலுக்கான தனியுரிமை மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி லோக்கேஷன் சேவையை இயக்குவதையும் முடக்குவதையும் தவிர, இன்னொரு ஆப் வசதியில் நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதும் உங்கள் இருப்பிடத்தை அணுக அனுமதிக்கும் மூன்றாவது விருப்பமும் கிடைக்கும்.
முன் எச்சரிக்கை செய்யும் பேட்டரி வசதி: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் உங்கள் பேட்டரி எப்போது வரை தாக்குப்பிடிக்கும் என்பதை காட்சிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
வைஃபை அணுக புதிய வசதி: இனிமேல் வைஃபை இணைக்க இனிமேல் பாஸ்வேர்டு டைப் செய்ய வேண்டியதில்லை, அதற்கு பதிலாக QR குறியீடு வசதியின் மூலம் வைஃபை இணைக்கும் புதிய வசதி ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் கிடைக்கும்.
புகைப்படங்களை எடுப்பதில் தெளிவு: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் டெவலப்பர்களுக்கு புகைப்படங்களை அழமான தகவல்களை அணுக கிடைக்கும், உதரமாக ஒரு புகைப்படத்தை எடுக்கவேண்டும் என்றால், லென்ஸிலிருந்து குறிப்பிட்ட பொருட்களின் தூரம் பற்றிய தகவல்கள் மற்றும் சில தரவுகளை பகிரும். இது புகைப்படத்தை தெளிவாக எடுக்க வழிவகை செய்யும்.
ஃபார்மெட்: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் வீடீயோ Codecs-களை அதிரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது, எனவே பல வகையான ஃபார்மெட்களை நீங்கள் பயன்படுத்த முடியும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews