இந்திய விண்வெளித் துறையின் தந்தை: 100-ஆவது பிறந்த நாள் - டூடுல் போட்டுக் கொண்டாடிய கூகுள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 12, 2019

இந்திய விண்வெளித் துறையின் தந்தை: 100-ஆவது பிறந்த நாள் - டூடுல் போட்டுக் கொண்டாடிய கூகுள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
விக்ரம் சாராபாய் 100-ஆவது பிறந்த நாள் - டூடுல் போட்டுக் கொண்டாடிய கூகுள்
இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று புகழப்படும் டாக்டர் விக்ரம் ஏ. சாராபாய் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளான இன்று அவருக்கு சிறப்பு டூடுல் போட்டுக் கொண்டாடுகிறது கூகுள் நிறுவனம். விக்ரம் ஏ. சாராபாய் குஜராத் மாநிலத்தில் ஜைன குடும்பத்தில் 1919 ஆகஸ்ட் 12 அன்று பிறந்தவர். தந்தை அம்பாலால் சாராபாய் ஆமதாபாதில் சிறந்த தொழிலதிபர். தாயார் சரளா தேவி. பின்னாளில் அவர் உன்னதப் புகழ் பெறுவார் என்று பெற்றோரிடம் நோபல் இலக்கியவாதி ரவீந்திரநாத் தாகூர் ஒரு முறை கூறினாராம். தாகூரின் பரிந்துரைக் கடிதத்துடன் 1937-ஆம் ஆண்டு லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புனித யோவான் கல்லூரியில் சேர்ந்தார். இயற்பியலும், கணிதமும் பயின்று, 1940-ஆம் ஆண்டு இளநிலைப் பட்டதாரி ஆனார்.
பெங்களூரில் இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (ஐ.ஐ.எஸ்சி.) சேர்ந்தார். அங்கு 1940 முதல் 1945 வரை நோபல் விஞ்ஞானி சர் சி.வி.ராமனின் மாணவர் சாராபாய். அறிவியல் கழக இதழில் இவர் எழுதிய 'அண்டக்கதிர்களின் காலாந்தரப் பதிவுகள்' (1942) என்ற ஆய்வுக் கட்டுரையே இவரை விஞ்ஞானியாக உலகுக்குப் பறைசாற்றியது. 1942-ஆம் ஆண்டு நடனக் கலைஞர் மிருணாளினியைத் திருமணம் செய்தார் சாராபாய். அறிவியலும், கலையும் இணைந்ததோர் இல்லறத்தில், மகளாக நாட்டிய மங்கை மல்லிகா, மகனாக விஞ்ஞானி கார்த்திகேய சாராபாய் தோன்றினர். இங்கிலாந்தில் கேவண்டிஷ் பரிசோதனைச் சாலையில் ஆய்வுகள் நடத்தி, 1947-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். "காஸ்மிக் அண்டக்கதிர்' ஆராய்ச்சியில் ஈடுபட்டார் சாராபாய். அணுசக்திக் கழகத்தின் மானியத்துடன் கோட்பாட்டு இயற்பியல், வானலை இயற்பியல் போன்ற பிற துறை ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டன. 1951-ஆம் ஆண்டிலேயே குஜராத் எல்லையை ஒட்டி ராஜஸ்தானில் அபு மலையில் அண்டக்கதிர் ஆய்வுக்கூடம் நிறுவினார். முதன்முதலாக ஓசோன் படல ஆய்வு இங்கிருந்துதான் மேற்கொள்ளப்பட்டது. இன்று "சி.எஸ்.ஐ.ஆர்.' என்று அறியப்படும் அறிவியல், தொழில் துறை ஆய்வுக் குழுமத்தின் பேராசிரியர் எஸ்.எஸ்.பட்நாகர் மற்றும் இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் டாக்டர் ஹோமி ஜே.பாபா ஆகியோர் ஒத்துழைப்புடன் 1952-ஆம் ஆண்டு ஆமதாபாத் ஆய்வுக் கூடத்தின் சொந்தக் கட்டடத்துக்கு சர் சி.வி.ராமன் அடிக்கல் நாட்டினார். 1954-ஆம் ஆண்டு பண்டித ஜவாஹர்லால் நேரு அதைத் திறந்துவைத்தார். திருவனந்தபுரத்தில் விண்வெளி ஆராய்ச்சி, கொல்கத்தாவில் "மாறுபடும் ஆற்றல் சைக்ளோட்ரான் திட்டம்', ஹைதராபாதில் "இந்திய மின்னணுவியல் கழகம்', ஜார்க்கண்டில் "இந்திய யுரேனியம் கழகம்' என உண்மையான தேசியச் சிந்தனையுடன் அறிவியலுக்குப் பாடுபட்ட உன்னத மனிதர் விக்ரம் சாராபாய்.
இந்திய அணுசக்தித் துறையின் தலைவரான பேராசிரியர் ஹோமி ஜே. பாபாவின் உதவியுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் முனைப்பான ஊக்கத்தினால் பேராசிரியர் விக்ரம் ஏ. சாராபாய் தலைமையில் 1962-ஆம் ஆண்டு "இன்கோஸ்பார்' எனும் "இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுமம்' உருவானது. புவிகாந்த நடுக்கோட்டுப் பகுதியில், திருவனந்தபுரம் அருகில் தும்பா கடற்கரை கிராமம், வானிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம். முன்னேறிய நாடுகளின் துணையுடன் அங்கு "டெர்ல்ஸ்' எனச் சுருக்கி அழைக்கப்படும் "தும்பா நிலநடுக்கோட்டு ராக்கெட் ஏவுதளம்' உதயமானது. அறிவியல்பூர்வ மத நல்லிணக்கத்தை விரும்பியவர் டாக்டர் சாராபாய். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஆராவமுதன், இரா.மா.வாசகம், ஏ.இ.முத்துநாயகம், ஏ.வி. சிட்னிஸ், எம்.ஆர்.குருப், வி.ஆர்.கோவாரிக்கர் போன்ற தனிச் சிறப்பு மிக்கப் பலரையும் தம்முடன் இணைத்துக்கொண்டார். அதனால்தான் இந்திய விண்வெளித் துறை இன்றைக்கும் ஜாதி, மத, மொழி, இன பேதம் இன்றி அனைவருக்கும் தேவையான தகவல்களை வழங்கி வான்வெளியில் உயர்ந்து பறக்கிறது. 1963 நவம்பர் 21 அன்று இந்த ஏவுதளத்தில் இருந்து அமெரிக்க நாட்டின் 'நைக்கி அப்பாச்சி' என்கிற வானிலை ஆய்வூர்தி செலுத்தப்பட்டது. இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட முதலாவது ஏவூர்தி இது.
அரை நூற்றாண்டுக்கு முன், தும்பா நிலையத்தில் உந்து எரிபொருள் துறையால் "மிருணாள்' என்ற எரிபொருள் தயாரிக்கப்பட்டது. அந்த நைட்ரோ-கிளிசரின் எரிபொருளால் இயங்கும் "ரோகிணி -75 ஆய்வூர்தி' 1969 பிப்ரவரி 21 அன்று ஏவப்பெற்றது. உள்நாட்டு பாலிவினைல் குளோரைடு எரிபொருள் நிறைத்த ஆய்வூர்தி, 1969 மார்ச் 2 அன்று "நிலைப் பரிசோதனை' செய்யப்பட்டது. 1969 டிசம்பர் 7 அன்று வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிடப்பட்டது. டாக்டர் சாராபாய் பிறந்த பொன்விழா ஆண்டில் 1969 ஆகஸ்ட் 15 அன்று இந்திய அணுசக்தித் துறையின் கீழ் "இஸ்ரோ' என்ற "இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்' உருவானது. திருவனந்தபுரத்தில் இவர் உருவாக்கிய "விக்ரம் சாராபாய் விண்வெளி ந ஆய்வு மையம்' இன்று அனைத்துலக நாடுகளில் முன்னணி வரிசையில் நிற்கிறது. 1973-ஆம் ஆண்டு நிலவில் "அமைதிக்கடல்' பிரதேசத்தில் பெஸ்ஸல் என்னும் பெருங்குழிக்கு "சாராபாய் பள்ளம்' என்று பன்னாட்டு வானவியல் ஒன்றியம் பெயர் சூட்டி கௌரவித்தது. சந்திரயான்-1 திட்டத்தில் அவரது தலைமைச் சீடர் டாக்டர் அப்துல் கலாம் ஆலோசனையின் பேரில் நம் தேசியக் கொடி பதித்த "மிப்' என்ற நிலா மோதுகலன் சந்திரனில் சென்று விழுந்தது. சந்திரயான்-2 திட்டத்தின்கீழ் "விக்ரம்' எனும் கலன் சந்திரனில் மெல்லத் தரை இறங்க உள்ள நிலையில், இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் பிதாமகன் விக்ரம் சாராபாய் அவர்களை நாம் நன்றியோடு நினைத்துபப் போற்ற வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews