சென்னையில் 1000 பட்டதாரிகளிடம் வேலைவாய்ப்பு மோசடி DBI நிறுவனம் மீது புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 14, 2019

சென்னையில் 1000 பட்டதாரிகளிடம் வேலைவாய்ப்பு மோசடி DBI நிறுவனம் மீது புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை கோடம்பாக்கம் போரூர் உள்பட 4 இடங்களில் டிஜிட்டல் பாங்கிங் இந்தியா என்ற பெயரில் பிரவீன் ஐயப்பன் கிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். வங்கியில் வேலை என்று சமூகவலைத்தளங்களில் தரகர்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டு இதுவரை 1000 பட்டதாரிகளை வேளைக்கு சேர்த்துள்ளனர். பலரிடம் இது மத்திய அரசுப்பணி என்று ஏமாற்றி 2லட்சம் முதல் 3லட்சம் வரை தரகர்கள் மூலம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சிலரிடம் முன்பணம் பெறாமல் வேளைக்கு வந்தால் மட்டும் போதும் என்கிற ரீதியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். வங்கிகளின் கணினி சேவைகளை ஒப்பந்தம் எடுத்து தங்கு தடயமின்றி வழங்குவது தான் இவர்களின் பணி என்றும் ஒப்பரேஷனல் எக்சிகியூட்டிவ் என்றார் பெயரில் பணி அடையாள அட்டை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்வத்துடன் பணிக்கு சேர்ந்த இளைஞர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக எண்ணுகின்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள், இந்நிலையில் கோடம்பாக்கம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய பிரவீன் என்பவர், ஊதியம் நிலுவையின்றி வழங்கப்படும் என்று உறுதியளித்து பணியாளர்களை அலுவலகத்திற்குள் அழைத்து சென்றார். அதே நேரத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த செய்தியாளரிடம் சில ரவுடிகளை ஏவி பிரவீன் கொலைமிரட்டல் விடுத்தார். இவர்களை போன்ற நபர்கள் வேலை வாங்கித்தருவதாக கூறி லட்சங்களை பறித்து கொண்டே இடைத்தரகர்கள் மீதும் காவல் துறையினர் புகார்களை பெற்று உறுதியான நடவிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஆதங்கமாக உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews