TNPSC - அரசுப் பணியாளர் தேர்வாணைய நிரந்தரப் பதிவு அவசியமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

TNPSC - அரசுப் பணியாளர் தேர்வாணைய நிரந்தரப் பதிவு அவசியமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்தேர்வுகளுக்கு நிரந்தரப்பதிவு அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு முதலில் விண்ணப்பிப்பவர்கள் இரண்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் நிரந்தரப் பதிவு செய்ய வேண்டும்.அதில் விண்ணப்பதாரர், தாய்,தந்தை பெயர், பிறந்த நாள்,ஜாதி,வகுப்பு, 10ம் வகுப்பு விபரங்கள், புகைப்படம், கையெழுத்து,உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் நிரப்பி அதற்கான கட்டணமாக அனைத்துப் பிரிவினரும் ரூ.150 செலுத்த வேண்டும்.பின்னர் நிரந்தரப் பதிவின் பயனாளர் குறியீடும், கடவுச் சொல்லையும் பயன்படுத்தி வேலைகளுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.அப்போது தேவையானவர்கள் வகுப்பு,கல்வித்தகுதியை, பதிவு எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும்.
இதனால் மறுமுறை வேலைக்கு விண்ணப்பிக்கும் போது பெயர்கள்,பிறந்தநாள், ஜாதி, படம், கையெழுத்து உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் மீண்டும் உள்ளீடு செய்யத் தேவையில்லை என்பது தான். இருப்பினும் நிரந்தரப் பதிவு எண்ணை பயன்படுத்தும் போது மீண்டும் படம்,கையெழுத்து மாற்றம் செய்ய கோரிக்கை எழுப்பப்படுகிறது. நிரந்தரப்பதிவிற்கு 5 ஆண்டுகளில் மீண்டும் மறுகட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது.குறிப்பாக பலர் தங்கள் நிரந்தரப் பதிவை மறந்து விடுவதால் புதிதாக நிரந்தரப்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அதற்கான பயனாள் குறியீடு, கடவுச் சொல்லை கண்டு பிடிக்க நிரந்தரப்பதிவில் பயன்படுத்தியஅலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இல்லாவிட்டாலும் சாத்தியமில்லை. இதனால் பலர் விண்ணப்பிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே பலருக்கும் பயன்படுவதை விட தொல்லையாக நிரந்தரப்பதிவு உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் கடைசி நேரத்தில் விண்ணப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நிரந்தரப்பதிவால் மேலும் காலம் வீணாகி விடுகிறது. தொகுதி 4க்கும் விண்ணப்பிக்கும் போது வழக்கம் போல இணையதளம் வேகம் குறைந்த நிலையில், இரண்டு பதிவுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தடுமாறினர். எனவே மற்ற துறையினர், மத்திய அரசு துறையினர், வங்கித்துறையினர் போல விண்ணப்ப முறையை எளிதாக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்முன் வர வேண்டும். நிரந்தரப் பதிவை ரத்து செய்து நேரடியாக விண்ணபிக்க வழி காண வேண்டும் என்பது பல இளைஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews