நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக தற்போது பின்பற்றப்படுகின்ற நீட் தேர்வு மற்றும் புதிதாக மத்திய அரசு திணித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக எம்பிக்களை பொறுத்த வரை பல்வேறு பிரச்சனைகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். ஏற்கனவே மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய பிரச்சனையானது நீட் தேர்வால் ஏற்கனவே தமிழக மாணவர்கள் பாதித்து வரும் இந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கான ஒரு நுழைவுத்தேர்வாக நெக்ஸ்ட் என்ற தேர்வை மத்திய அரசு திணித்திருக்கிறது. இது மத்திய அரசினுடைய மாணவர்களுக்கு எதிரான ஒரு போக்காக காணப்படுகிறது. நீட் தேர்வு தமிழக மாணவர்களை பாதித்து வரும் நிலையில் இந்த நெக்ஸ்ட் தேர்வு மாணவர்களை பெருமளவு பாதிக்கும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என பேசினார்கள்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த எம்பிகளாக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எம்பிக்கள் சுமார் 30திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட இந்த கோரிக்கைகள் தற்போது போராட்டமாக முன்னெடுத்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் பொதுத் தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றை மீறி நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோக நிகழ்வுகளையும் காண முடிந்தது.
இந்நிலையில் மத்திய அரசு நெக்ஸ்ட் எனப்படும் தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது எம்.டி மற்றும் எம்.எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு முறையை கைவிட முடிவு செய்துள்ளது. அதற்கு பதில் நெக்ஸ்ட் எனப்படும் National Exit Test தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேசிய நிறைவு நிலை தேர்வை எழுதி விட்டால், எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்க உரிமம் பெற தனித் தேர்வு எழுத தேவையில்லை. இதுதொடர்பாக திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் வலியுறுத்தி பேசியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews