அண்ணா பல்கலைக்கு புதிய பொறுப்பு பதிவாளர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

அண்ணா பல்கலைக்கு புதிய பொறுப்பு பதிவாளர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கு, புதிய பொறுப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலை பதிவாளராக இருந்த, பேராசிரியர் கணேசனின் பதவிக் காலம், 2018ல் முடிந்தது. இதையடுத்து, திட்டமிடல் துறை பேராசிரியராக இருந்த குமார், பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவர் இந்தாண்டு, ஜூன் மாதத்துடன், நிர்வாக ரீதியான ஓய்வு வயதை அடைந்தார். எனவே, நடப்பு கல்வி ஆண்டு வரை, அவரை பேராசிரியராக மட்டும் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பதிவாளர் பொறுப்பில் இருந்து, பேராசிரியர் குமார் விடுவிக்கப்பட்டார்.இதையடுத்து, பல்கலையின் புதிய பொறுப்பு பதிவாளராக, பேராசிரியர் கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அண்ணா பல்கலையில், மெக்கானிக்கல் துறை பேராசிரியராக உள்ளார். அண்ணா பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின் துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரை பட்டியல்களில், ஏற்கனவே இடம் பெற்றிருந்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews