ராணுவ கல்லூரியில் சேர தேர்வு; Click Here For Apply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

ராணுவ கல்லூரியில் சேர தேர்வு; Click Here For Apply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூனில் உள்ள, இந்திய ராணுவக் கல்லுாரியில், அடுத்த ஆண்டு, ஜூலை மாதம் சேருவதற்கான தேர்வு, டிசம்பரில் நடக்கவுள்ளது.டிச., 1 மற்றும் 2ம் தேதி, சென்னையில் தேர்வு நடக்க உள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியே, மாணவர் கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மட்டும், 2020 ஏப்., 7ல், நேர்முகத் தேர்வு நடக்கும்.தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு போன்றவற்றை, 'கமாண்டன்ட், ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன், உத்தரகண்ட் - 248003' என்ற முகவரிக்கு, விரைவு தபால் வழியே, உரிய விண்ணப்ப கட்டணத்தை அனுப்பி பெறலாம்.
அல்லது www.rimc.gov.in என்ற, இணையதளம் வழியே பெறலாம்.விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு, சென்னையில் உள்ள, தேர்வாணைய அலுவலகத்தில் வழங்கப்படாது. தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, நகல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2020 ஜூலை 1 அன்று, 11 ஆண்டு ஆறு மாதம் வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், 'தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை' என்ற முகவரிக்கு, செப்., 30க்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews