அனுமதி இல்லாத கல்லூரிகள்... அனுபவம் இல்லாத ஆசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

அனுமதி இல்லாத கல்லூரிகள்... அனுபவம் இல்லாத ஆசிரியர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மீன்வளப் பல்கலை மீது வரிசைகட்டும் குற்றச்சாட்டுகள் கப்பல் இல்லை, காற்றாலை இல்லை, அரசு அனுமதி இல்லை, ஆசிரியர்களுக்கு அனுபவம் இல்லை... இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது ஒரு பல்கலைக்கழகம். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி, பொன்னேரி, நாகப்பட்டினம், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மீன்வளக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அரசு அனுமதி இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும், புதிது புதிதாகக் கல்லூரிகளைத் தொடங்குவதாக இந்தப் பல்கலைக்கழகம் மீது மாணவர்கள் புகார் சொல்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், ‘‘2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்த ராக பெலிக்ஸ் பொறுப்பேற்றார். அவர் வந்த உடனே, காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ் சாவடியில் பி.டெக் - உயிரி தொழில்நுட்பவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இதுவரை அரசு அனுமதி பெறப்படவில்லை. சிறிய ஆய்வகமே உள்ளது, ஹாஸ்டல் வசதியும் இல்லை. துறைரீதியாக நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. முதுநிலை மீன்வள அறிவியல் (எம்.எஃப்.எஸ்சி) படித்து வெளியே வந்த போதிய அனுபவம் இல்லாத மாணவர்களை, ஆசிரியர்களாகப் பணிக்குச் சேர்த்து, பாடம் எடுக்கின்றனர். 2017-ல் தொடங்கிய பி.டெக் உயிரி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. அதேசமயம் 2018-ல் மாதவரத்தில் தொடங்கப் பட்ட பி.டெக் உணவு தொழில்நுட்பம் சுயநிதி கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஏன் இந்த முரண் என்று எங்களுக்குப் புரியவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடியில் பி.டெக் படிப்புக்கான கப்பல் தொழில் நுட்பக் கல்லூரி, நாகப் பட்டினத்தில் பி.டெக் படிப்புக்கான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் கல்லூரி, வாணியஞ்சாவடி யில் பி.பி.ஏ படிப்புக்கான மீன்வள வணிக மேலாண்மை கல்லூரி என மூன்று சுயநிதிக் கல்லூரிகள் இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு ஜூலை மாத மத்தியில் நடத்தப்படுகிறது. இந்த மூன்று கல்லூரி களுக்குமே அரசு அனுமதி வழங்கப் படவில்லை.
அதுபோல புதிதாகத் தொடங்கும் பி.டெக் கப்பல் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மத்திய அரசின் கப்பல் துறையில் அனுமதி பெறவேண்டும். இந்தப் படிப்புக்கு கண்டிப்பாகக் கப்பல் வேண்டும். பி.டெக் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் படிப்புக்கு கல்லூரி வளாகத்திலேயே காற்றாலை நிறுவ வேண்டும். இந்த வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை. சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கி மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது மீன்வள பல்கலைக்கழகம். இதுபற்றி அரசு சிறப்புக் குழு அமைத்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர். வேளாண் பல்கலையில் பி.எஸ்சி முடித்தால்தான், வேளாண் துறையில் பணியில் சேரமுடியும். கால்நடைத் துறையில் பி.வி.எஸ்சி முடித்தால்தான், கால்நடைத் துறையில் வேலைக்குச் சேரமுடியும். அதேபோல், மீன்வளத் துறையில் பி.எஃப்.எஸ்சி படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்றிருந்த நிலை, கடந்த ஆண்டு முதல் மாற்றப்பட்டுவிட்டது. எம்.எஸ்சி - விலங்கியல், எம்.எஸ்சி - கடல்சார் உயிரியல் படித்தாலும் மீன்வளத் துறையில் வேலைக்குச் சேரலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்வள பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கான வாய்ப்புகளை மற்றவர்கள் பறிப்பதாக மாணவர்கள் குமுறுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெலிக்ஸிடம் பேசினோம், ‘‘எங்கள் பல்கலைக் கழகத்துக்கென தனி விதிமுறைகள் உள்ளன. அதன்படி, புதிய கல்லூரிகள் தொடங்கவும், அதற்கான நிதிகள் உருவாக்கவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. பல்கலைக் கழகத்தில் வேலைசெய்ய பயப்படும் சில ஆசிரியர்கள் தான் இதுபோன்று பிரச்னை களைக் கிளப்பிவிடுகிறார்கள். அரசு அனுமதி கொடுத்த பாடப் பிரிவுகளை மட்டும் தொடங்குவதாக இருந்தால், பல்கலைக்கழகத்தின் பொறுப்புகளை நாம் தட்டிக் கழிப்பது போன்றதாகிவிடும். நான் பணிக்குச் சேர்வதற்கு முன்பு வரை, ஆண்டுக்கு 150 மாணவர்கள்தான் இந்தப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்கள். கோடிக்கணக்கில் செலவுசெய்து குறைந்தளவு மாணவர்களுக்கு மட்டுமே இந்தப் பல்கலைக்கழகம் பயன்பட்டால் அது மக்களுக்குத்தான் இழப்பு. பல்கலைக்கழகம் என்றால், குறைந்தது ஆயிரம் மாணவர்களாவது பயன்பெற வேண்டும். மீன்வள பல்கலைக்கழகத்தில் படித்தவர்களை மட்டும்தான் மீன்வளத் துறைப் பணிகளில் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசுக்கும், துறை அமைச்சருக்கும், டி.என்.பி.எஸ்.சி-க்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எம்.எஃப்.எஸ்சி படித்த மாணவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று விதிமுறை இருக்கிறது. ஐந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதாசாரத்தை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். கடல்சார் தொழில் நுட்பப் படிப்புக்குத் தேவையான இரண்டு கப்பல்கள் வாங்குவதற்காக, மூன்று கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விஷயங்களை எல்லாம் மாணவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews